தமிழ்நாட்டில் சில நாட்களாக பருவ மழை பெய்துவரும் நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், இன்று (டிச.3) இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.