என்னுடைய Account-லயே Minimum balance இருந்த போதிலும் ஒரே ஆண்டிற்குள் ரூ.10,640-ஐ எடுக்கப்பட்டுள்ளது. இதை நான் கொள்ளையடிக்கப்பட்டதாக கருதுகிறேன். இந்தியாவில் இந்த ஆண்டில் Minimum balance போன்ற காரணங்களால், ரூ.35,587 கோடியை மக்களிடமிருந்து வங்கிகள் எடுத்துள்ளது. தமிழக அரசு மகளிருக்கு வழங்கும் ரூ.1000 கூட Minimum balance இல்லை என மத்திய அரசு நூதன முறையில் எடுத்து கொள்வதாக கருதுகிறோம். இதை சரிசெய்ய சட்டத்திருத்தம் தேவை என ஈரோடு எம்.பி. பிரகாஷ் பேசியுள்ளார்.