ரூ.2000 நிவாரணம்.. யார் யாருக்கு கிடைக்கும்?

59பார்த்தது
ரூ.2000 நிவாரணம்.. யார் யாருக்கு கிடைக்கும்?
விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள X தள பதிவில், "விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி