விழுப்புரம் அரகண்டநல்லூர் பேரூராட்சியில் தென்பெண்ணை மற்றும் துரிஞ்சல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் சுமார் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 நாட்களாக பசி பட்டினியோடு இருக்கும் தங்களுக்கு துர்நாற்றம் வீசிய உணவை வழங்கியதாக திமுகவினரை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் கூட வழங்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.