ஓமலூரில் இருந்து தாரமங்கலம், மேச்சேரி, மேட்டூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை எதுவும் அருகில் இல்லாததாலும், ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலத்தில் உயர்மட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் வயதானவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் ஏறி இறங்கி முடியாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அருகிலுள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரமே உள்ள நிலையில் மேம்பாலத்தின் படிக்கட்டுகள் மிக உயரமாக இருக்கிறார் ஏறி இறங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், ஜெயா தியேட்டர் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில், வ உ சி நகர், நேரு நகர் ஆகிய பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தாலுக்கா அலுவலகம் மிக அருகில் உள்ளது இதனை கடந்து செல்ல ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று பாலத்தின் மீது ஏறி தாலுகா அலுவலகம் வர இரண்டு கிலோமீட்டர் வரை ஆகும் இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.