ஓமலூர்; நிறுத்தத்தில் நிற்காத அரசு பேருந்து பயணிகள் புகார்!

60பார்த்தது
சேலம் நகரப் பேருந்து நிலையம், ஓமலூர் வழித்தடத்தில் 64/79 எண் கொண்ட அரசு நகரப்பேருந்து ஒன்று இன்று மதியம் ஓமலூரில் இருந்து நகரப் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது நாரணம்பாளையம் பிரிவு நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த சிலர் பேருந்து நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

6 ரூபாய் கட்டணத்திற்கு சில்லறை இல்லை எனக்கூறி 10 ரூபாய் வசூலிப்பதோடு பேருந்து நிறுத்தத்திலும் தங்களை இறக்கி விடுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.

டேக்ஸ் :