கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு!

79பார்த்தது
கங்கனா ரனாவத்தை அறைந்த காவலருக்கு மோதிரம் பரிசு!
நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பதாக தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. தபெதிக-வின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனையாக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை குல்விந்தர் கவுரை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.