நகைக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்! வீடியோ

64பார்த்தது
நகை வாங்குவது போல் நடித்து 2.5 சவரன் நகையை திருடிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தரணம்பேட்டை பகுதியில் நகை வாங்குவது போல் கடைக்குள் வந்த நபர் நகைகளின் விலையை கேட்டுவிட்டு 2.5 சவரன் தங்கச்சங்கிலியை நகைக்கடை ஊழியர்களுக்கு தெரியாமல் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளார். அதன்பிறகு பணம் குறைவாக இருப்பதாகவும் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்து வருவதாகவும் கூறிவிட்டு நகை கடையிலிருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி வெளியேறி உள்ளார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி