சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் உள்ள காடையாம்பட்டி வட்டம், கணவாய்புதூர் ஊராட்சியில் அமைந்துள்ள கண்ணப்பாடி மலை கிராம மக்கள் கடந்த 5 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சாலை மிகவும் பழுதடைந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிரதான சாலையாக உள்ளதால் மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மழை நீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த சாலையை புனரமைத்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.