சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர் மணியக்காரனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜாத்தி (44).
கடந்த 2-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக முருகன், அவருடைய மனைவியிடம் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாத்தி கணவருடன் பணிபுரியும் சக ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர் விடுமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாத்தி தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் வழக்குப்பதிவு செய்து மாயமான அரசு பள்ளி ஆசிரியர் முருகனை தேடி வருகின்றனர்.