மேட்டூர் - Mettur

நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு

நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பிருந்தாதேவி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாய்க்கடி, பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்துகள் இருப்பு குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிர் இழப்பை தடுக்கலாம். மாவட்டத்தில் கடந்த ஆண்டு 37 ஆயிரத்து 23 பேர் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 7 ஆயிரத்து 572 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தேவையான அளவு வெறிநோய் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன என்றார். பின்னர் நங்கவள்ளி பேரூராட்சியில் ரூ. 50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ. 39½ லட்சத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வனவாசி பேரூராட்சியில் ரூ. 1½ கோடியில் எரிவாயு தகனமேடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా