மேட்டூரில் குடிநீர் குழாயில் உடைப்பு.

83பார்த்தது
மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரோற்றும் நிலையம் மூலம் மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட பொன் நகர், காவேரி நகர், சக்தி நகர், கூலி லைன், மானதயன்குட்டை ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் மின் பணிமனை சந்திப்பு சாலையோரம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனை அடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை நகராட்சி பணியாளர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி