மேட்டூரில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

84பார்த்தது
மேட்டூரில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
மேட்டூர் துணை மின் நிலையம், மேட்டூர் ஆர். எஸ். , மேச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன் குட்டை, நவபட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேட்டூர் ஆர். எஸ். , கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன் நகர், தேசாய் நகர், தங்கமாபுரிபட்டினம், மேச்சேரி, வேங்கனூர் பள்ளிப்பட்டி ஆண்டிக்கரை பொட்டனேரி, கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாறை கல்லூர், எம். காளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவல்களை மேட்டூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்தி