மல்லியக்கரை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர். என். பாளையம், மத்துரூட்டு, வி. ஜி. புதூர், பூசாலியூர், வி. பி. குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள்(செப்.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முல்லை தெரிவித்துள்ளார்.