சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் உத்தரவின்படி துப்புரவு அலுவலர் பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் ஆத்தூர் நகராட்சி பெரியார் சிலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பேப்பர்கள் சுமார் ஒரு டன் அளவில் பறிமுதல் செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த மூன்று கடை உரிமையாளர்களுக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.