சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. சேலம் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். முட்டல் பகுதியில் இருந்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு செல்ல 2.5 கிலோ மீட்டர் தொலைவு என்பதால் பொதுமக்கள் சென்றுவர சிரமப்பட்டனர்.
பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு நுழைவாயில் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறை சார்பில் சிற்றுந்து வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் ஒரு முறை சென்று வர ஒருவருக்கு 20 ரூபாய் தற்காலிகமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.