சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லை ஆலச்சம்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கோவில் அருகே திரைப்பட நடன, நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த திரளானோர் வந்திருந்தனர். இதில் எடப்பாடி அருகே சின்ன ஏரி பகுதியை சேர்ந்த இடும்பன் மகன் மாணிக்கவேல், தேவன்ணக்கவுண்டனூர் கிராமம் மலங்காடு பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் தாமரைச்செல்வன் ஆகியோரது மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து மாணிக்கவேல் கொடுத்த புகாரின்பேரில் எடப்பாடி போலீசார் மர்மநபரை ேதடி வந்தனர்.
இதற்கிடையே எடப்பாடி பஸ் நிலையம் அருகே போலீசார் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அனேரிராசமங்கலம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் மகன் ரகு (25) என்பதும், அவர் மாணிக்கவேல், தாமரைச்செல்வன் ஆகியோரது மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ரகுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.