நிலத்தகராறில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்

78பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட முயல்கரடு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (45). ரிக் வண்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி கோபி (35). நெல் அறுவடை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சொந்தமான 700 சதுர அடி பரப்பில் நிலம் உள்ளது. இந்நிலையில் தம்பி கோபி அந்த நிலம் தனக்கு தான் வேண்டுமென அடிக்கடி அண்ணன் சின்னதுரையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று மது போதையில் வீட்டுக்கு வந்த தம்பி கோபி அண்ணன் சின்னதுரை வீட்டில் தகராறு ஈடுபட்டுள்ளார். இதில் இருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சின்னதுரை வீட்டிலிருந்து காய் வெட்டும் கத்தியை எடுத்து கோபியின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதில் மயங்கி விழுந்த கோபி நிகழ்வு இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் கோபியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி