நாடு முழுவதும் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்த நாளை ஒட்டி காந்தி ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுவாச் பாரத் மிஷன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர் மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசனைப்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சேலம் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சிவக்குமார் செயலாளர் மோகன் குமார் மூத்த வழக்கறிஞர் ராமதாஸ் தன்னார்வலர்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.