அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி- 2 பேர் கைது

59பார்த்தது
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி- 2 பேர் கைது
சேலம் அம்மாபேட்டை சேர்ந்த மலர்கொடி தனது மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்காக சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன் (46) தனசேகர் (36) ஆகிய இருவரிடம் ரூ. 9. 70 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்று கொண்டவர்கள் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டதற்கு ரூ. 50, 000 மட்டும் திருப்பி கொடுத்து மலர்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன் மற்றும் தனசேகரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி