ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 10வது நாளாக குளிக்க தடை விதிப்பு

59பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் முட்டல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி ஆகியவை வனத்துறையின் சூழல் சுற்றுலாத்து திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு ஆத்தூர் மட்டும் இன்றி கள்ளக்குறிச்சி, சேலம, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். ஏரியில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்நிலையில்
கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது ஆர்பரித்து கொட்டி வருவதால் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு பத்து நாட்களுக்கு மேலாக இன்றும் வனத்துறையினர் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு. மேலும்
ஏரிப் பகுதியில் உள்ள பூங்கா, படகு சவாரி செல்வதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி