பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் - இபிஎஸ்

55009பார்த்தது
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் - இபிஎஸ்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் விடியா அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.1,000/-ஐ வழங்க வேண்டும். நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி