கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தேர்வு செய்யப்பட்ட சில பேருக்கு கடைசி நேரத்தில் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம், சிலர் வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை மாற்றி கொடுப்பதுதான். இந்த தவறால் உங்கள் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும், ஆனால் பணம் வேறு ஒருவருடைய வங்கி கணக்குக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பிக்கும்போதே நீங்கள் கொடுக்கும் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.