உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம புத்தா நகரில், காரில் சென்ற துஷார் சக்ஸேனா என்பவர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி நொய்டா போலீஸ் ரூ.1000 அபராதம் விதித்துள்ளது. நொய்டாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ராம்பூர் நகரில் வசிக்கும் துஷார். இதுவரை கவுதம புத்தா நகருக்கு காரில் சென்றதே இல்லை எனக் கூறியுள்ளார். எனினும் அபராதம் செலுத்தக் கூறி அவருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அபராதம் கட்டவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல நேரிடும் எனக் கூறியுள்ளனர்.