'கங்குவா' பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட சூர்யாவிடம் ROLEX or இரும்புக்கை மாயாவி? எது முதலில் உருவாகும் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, ரோலக்ஸ் பாத்திரத்தை வைத்து தனி படம் உருவாக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இப்போது லோகேஷின் வேலைகள், என் வேலைகள் எல்லாம் முடிய வேண்டும். 'ரோலக்ஸ்' மற்றும் 'இரும்புக்கை மாயாவி' ஆகிய படங்களில் எதை முதலில் செய்யலாம் எனவும் பேசினோம். ஆனாலும் இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்" என கூறினார்.