இயற்கை பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை

541பார்த்தது
இயற்கை பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை
சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவிக்கக்கோரி பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி வழங்க வேண்டும். வெள்ள பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைப்பதை அரசியல் முழக்கமாக கருத வேண்டாம்; பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்களையே பிரதிபலிக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்தி