இந்திய ரிசர்வ் வங்கி பொது நலன் சார்ந்த தகவல்களைப் பகிர்வதற்காக பாட்காஸ்ட்களை அறிமுகப்படுத்தவுள்ளது. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பரந்த பார்வையாளர்களுடன் இணைவதற்கும் ஆர்பிஐயின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அதன்படி, ஆர்பிஐ தனது தகவல் தொடர்பு ஆயுதக் களஞ்சியத்தில் பாட்காஸ்ட்களை ஒரு புதிய கருவியாக அறிமுகப்படுத்தும். வட்டி விகிதங்கள், பணவியல் கொள்கைகள் போன்றவற்றை பொதுமக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வசதியாக இது அமையும்.