திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (டிச. 08) கலந்து கொண்டார். அப்போது மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு தொடர்ந்து பேசினார்.