அமெரிக்காவின் பிலடெல்பியா நகரை சேர்ந்த பெர்னி லிட்மேன் (100) என்ற ஆணுக்கும், மார்ஜோரி ஃபிட்டர்மேன் (102) என்ற பெண்ணுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உலகின் மிக வயதான திருமணமான ஜோடி என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இருவரின் பெயரும் இடம்பிடித்துள்ளது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும், பெர்னியும் மார்ஜோரியும் முதியோர் இல்லத்தில் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர்.