கடலூரில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000 நிவாரண உதவி

51பார்த்தது
கடலூரில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000 நிவாரண உதவி
கடலூர் மாவட்டம் குண்டுஉப்பலவாடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். பின்னர், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 390 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி