தி.மலையில் மகா தீபம்.. வல்லுநர் குழு தீவிர ஆய்வு

61பார்த்தது
தி.மலையில் மகா தீபம்.. வல்லுநர் குழு தீவிர ஆய்வு
கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 13-ஆம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தி. மலையில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில் மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுநர் குழு ஆய்வு நடத்தி, அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே முடிவெடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஐ.ஐ.டி புவியியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் இன்று (டிச.8) ஆய்வு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி