ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (47) யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலில் நாகப்பட்டினம் செல்வதற்காக ஏறியுள்ளார். அப்போது படியில் நின்ற ஜெயக்குமார், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இந்த விபத்தில் அவரது கை துண்டானது. தற்போது அவர் மீட்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.