ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? - திருமா விளக்கம்

60பார்த்தது
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? - திருமா விளக்கம்
மதுரை மாவட்ட விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவது குறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். விசிக தலைவர்கள் மீதான புகார்களில் கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவு செய்யும். கூடிய விரைவில் ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றார். முன்னதாக, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், மன்னராட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜூனா பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.

தொடர்புடைய செய்தி