புதர் மண்டிய சுனாமி குடியிருப்பு வீடுகள்.!

51பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி பேரலை பாதிப்பிலிருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க திட்டம் வகுத்து கோடிகளை கொட்டி 144 காங்க்ரீட் வீடுகளை கட்டி ரம்மியமான கிராமம் அமைக்கப்பட்டும் கூட அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அடிப்படை வசதிகளோ வாழ்வாதார முன்னேற்ப்பாடுகளோ செய்து கொடுக்கப்படாததால் ஒரு கிராமமே காலியாகி கருவேலமரம் மண்டிக்கிடக்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் மங்களத்தை அடுத்த காரங்காடு சூழல் சுற்றுலா தளம் அருகே அமைந்துள்ளது மணக்குடி மீனவ கிராமம். இந்த மணக்குடியில் கழிவறை, படுக்கையறை, வரவேற்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட கான்கிரீட் சுனாமி வீடுகள் 425. 40 லட்சம் செலவில் 144 வீடுகள் கட்டப்பட்டு ஆழிப்பேரலையின் போது பாதுகாப்பாற்ற பகுதியில் வாழ்ந்துவந்த மீனவ மக்களுக்கு மாற்று பாதுகாப்பாக வழங்கப்பட்டது. ஆனால், இந்தப்பகுதிக்கு போக்குவரத்து , குடிநீர் , மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்ததால், ஒரு சில மாதங்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டை காலி செய்ய துவங்கி, ஒட்டுமொத்த கிராமமே காலியாகி ஒரு சில வீடுகளில் மட்டும் தற்போது வரை சில மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி