திருப்பூரில் வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர், குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை தேடி வந்த நிலையில், கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.