டெல்லி முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (பிப்., 19) நடைபெறவுள்ளது. ராம்லீலா மைதானத்தில் நாளை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியான நிலையில், இதுவரை முதலமைச்சர் யார்? என்பது பற்றிய அறிவிப்பை பாஜக வெளியிடவில்லை. அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி இந்தமுறை தோல்வியை தழுவியது.