சென்னை முகப்பேரை சேர்ந்த எஸ்தர் (75) சொந்த வீட்டில் வசித்த நிலையில் இந்தியன் வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி செலுத்தாததால் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், கடனை செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் நேற்று (பிப். 18) எஸ்தர் வீட்டுக்கு சீல் வைத்தனர். இதை பார்த்த அதிர்ச்சியில் அவர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கிறது.