சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஜெயராமன் பாஜக நிர்வாகியாவார். இவர் மனைவி அஸ்வினியும் அக்கட்சியில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் தனக்கு மத்திய அமைச்சர்கள் நெருக்கம் என கூறி அரசு வேலை வாங்கி வருவதாக லோகேஷ்குமார் (32) என்பவரிடம் ரூ. 17 லட்சம் பணம் வாங்கி ஜெயராமன் ஏமாற்றியுள்ளார். மேலும் இருவரிடமும் இது போல பணம் பெற்றுள்ளார். இது குறித்த புகாரில் ஜெயராம், அஸ்வினி உள்ளிட்ட நால்வரை போலீசார் தேடுகின்றனர்.