தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற 14 வயது சிறுவன்

64பார்த்தது
தந்தையை உயிருடன் எரித்துக் கொன்ற 14 வயது சிறுவன்
பணம் திருடியதை கண்டித்த தந்தையை 14 வயது சிறுவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அலீம் (55) என்பவர் உயிரிழந்தார். பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடியதற்காக அலீம் தனது மகனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் நள்ளிரவு நேரத்தில் தந்தையின் உடலில் திரவப் பொருளை ஊற்றி தீ வைத்துள்ளார். தப்பியோடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அலீமின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தந்தையும், மகனும் மட்டும் வசித்து வந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி