திருப்பூர் அவிநாசியில் நாதக சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எந்தவொரு மாநிலத்திற்கும் கொள்கை மொழி என்பது தாய்மொழியாக மட்டுமே இருக்க முடியும். கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது கொடுங்கோன்மை. விருப்பம் உள்ளோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும், எதற்கு திணிக்க வேண்டும்?. தேவை ஏற்பட்டால் எந்த மொழியையும் கற்போம். ஆணவத்தால் இந்தியை திணிக்க முயன்றால், இந்தியா ஒன்றாக இருக்காது” என எச்சரித்தார்.