நடிகர் சாஹில் கான் தனது காதலியை துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் திருமணம் செய்து கொண்டார். 48 வயது நடிகரான சாஹில் கான் தனது 21 வயது காதலியான மிலினா அலெக்ஸாண்ட்ராவை திருமணம் செய்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். சாஹிலுக்கு இது 2வது திருமணம். இவர் முன்னதாக நார்வே நாட்டு மாடலும் நடிகையுமான நெகர் கானை மணந்தார். திருமணமான ஒரு வருடத்தில் இருவரும் பிரிந்தனர். தற்போது திருமணம் செய்துள்ள மிலினா ஐரோப்பாவின் பெலாரஸைச் சேர்ந்தவர்.