உலக சுற்றுச்சூழல் தின விழா.!

73பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தின விழா.!
ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் திருப்புல்லானி ஒன்றியம் மேதலோடை வடக்கு கிராமத்திலும் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா நடந்தது.

மேதலோடை ஊராட்சி தலைவர் மெனையத்தாள் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் ஷோபனா முன்னிலை வகித்தார். ஆர். டபிள்யூ. டி. எஸ். , ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி, பணியாளர் காமாட்சி ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மரம் வெட்டுவதை தடுத்து மரங்களை வளர்ப்போம். பேக்கிங் பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து ஊட்டச்சத்து நிறைந்த தானிய வகைகளை வாங்கி சாப்பிட்டு குப்பை சேர்வதை தடுப்போம் என குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோரவள்ளி அங்கன்வாடி உதவியாளர் பரிமளா, பனைத் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர்கள், குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி