ராமோஜி ராவ் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

51பார்த்தது
ராமோஜி ராவ் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மூத்த பத்திரிகையாளர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ராமோஜி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத் துறைகளில் அவராற்றிய பங்களிப்புகள் என்றும் நிலைத்திருக்கும். இந்த கடினமான நேரத்தில் ராமோஜி ராவ்வின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி