தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி பாஜகவிலும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தோல்விக்கு மாநிலத் தலைவர் செல்வகணபதி தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவித முன் அனுபவமும் இல்லாத செல்வகணபதி தன்னுடைய மோசமான நிர்வாகத்தால் அமைச்சாராக உள்ள நமச்சிவாயம் தோல்வியுற்றுள்ளார். வாக்குச்சாவடி மையங்களில் அமர பாஜக சார்பில் முகவர்கள் கூட இல்லை" என குற்றம்சாட்டி உள்ளார்.