

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற ஆரோக்கிய டேனியலின் விசைப்படகு, மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. படகுடன் 7 மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது