மோடி பதவியேற்பு விழா.. வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு

75பார்த்தது
மோடி பதவியேற்பு விழா.. வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாளை (ஜூன் 9 பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலதீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி