அதிமுகவிற்கு நான் மட்டுமே பிரச்சாரம் செய்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்கு பின் முதல்முறையாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, "பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர். திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். 2019 மக்களவைத் தேர்தலை விட 1% அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே” என தெரிவித்துள்ளார்.