மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு சங்கத் தலைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு நாளை 29. 03. 2025 காலை 10 மணி முதல் மதியம் 1. 00மணி வரை பாம்பன் புதிய ரயில்வே பாலம் திறப்பு விழாவுக்கான ஒத்திகை நடைபெற இருப்பதால் அந்த நேரத்தில் நாட்டுபடகு மற்றும் விசைப்படகுகள் பாம்பன் பாலத்தை கடக்க வேண்டாம் மேலும் ஒத்திகை நடைபெறும் பொழுது ஆத்துவ (channel)பகுதியில் விசைபடகு மற்றும் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்க வேண்டாம் என அறிவித்தப்படுகிறது மீறி பாம்பன் பாலத்தை கடக்கும் படகுகள் மீது மீன்வளத்துறை மற்றும் ரயில்வே துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். என உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இராமேஸ்வரம்.