மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது

73பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திர கோசமங்கையில் அமைந்துள்ள உலகத்தில் முதல் சிவாலயத்தில் 04. 04. 2025 இன்று சரியாக பகல் 9. 30 மணியளவில் நாடே எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருந்த மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் கலச அபிஷேக புனித நீரை ட்ரோன்கள் மற்றும் பைப்கள் மூலமும் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை புரஷ்காரங்கள் நடத்தப்பட்டது. மரகத நடராஜர் சிலை முன்பு புதியதாக தங்கத்தால் அமைக்கப்பட்ட கொடிமரம் மற்றும் நடராஜர் கருவறை முன்பு முகப்பில் அமைக்கப்பட்ட தங்க கவசம், நடராஜர் கோபுரத்தின் கூரையில் தங்கத்தால் அமைத்தவற்றை வருகை புரிந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 01. 04. 2025 முதல் 04. 04. 2025 வரை சந்தன காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை பார்ப்பதற்கு மக்கள் அலை அலையாக நெடுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி