Feb 22, 2025, 02:02 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்
இராமேஸ்வரம்திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா 4ம் திருவிழா
Feb 22, 2025, 02:02 IST
இராமேஸ்வரம் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா 4ம் திருவிழாவான இன்று இராமநாதசுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும் அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா.
இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகா சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 18ம் தேதி சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு 4ம் திருவிழாவான இரவு 8 மணிக்கு நாயகர் வாசலில் ஒளி வழிபாடு முடிந்து அருள்மிகு இராமநாதசுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும் அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நான்கு ரத வீதியில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்